திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை: 5 காவலர்கள் பணியிடை மாற்றம்
பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தால் இரவு பணியில் இருந்த 5 காவலர்கள் பணியிடை மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் இரவு நேரங்களில் நடைபெற்று வருகின்றன.
அதிலும் குறிப்பாக வந்தவாசி செய்யாறு கலசப்பாக்கம் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளன. இரவு நேரங்களில் அதிக அளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என மாவட்ட எஸ்பிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலசப்பாக்கம் பகுதியில் 20 ரோந்து பணியில் இருந்த 5 போலீசாரை பணியிட மாற்றம் செய்து திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
தலைமை ஆசிரியை வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்த இரவில் பணியில் இருந்த 5 போலீசாரை பணியிட மாற்றம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா விண்ணுவாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேவன். இவரது மனைவி சுந்தரி, அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக தேவன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 70 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் இருந்த கலசபாக்கம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 5 போலீசாரை திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu