இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்
Secondary Grade Teachers Agitation
பணிகளைப் புறக்கணித்து இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடத்த ஏழு நாட்களாக சென்னை டி பி ஐ வளாகத்தில் இடைநிலை பகுதி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அந்தோணி தாஸ் தலைமை தாங்கினார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் அந்தோணி தாஸ் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வர் தங்களது கோரிக்கையை உடனே நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை மாநில அளவிலான சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து தினந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் போராடுவோம் என தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu