திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
X

 திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

திருவண்ணாமலை ஒன்றிய பகுதி ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 42 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மரியதேவ் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஆணையாளர் டி.பரமேஸ்வரன் வரவேற்றார்.

கூட்டத்தில் நல்லான்பிள்ளைபெற்றாள், மலப்பாம்பாடி, காடகமான், விஸ்வந்தாங்கல், அண்டம்பள்ளம், பழையனூர் நொச்சிமலை, அரடாப்பட்டு, சு.நல்லூர், நல்லவன்பாளையம், தென்மாத்தூர், அடிஅண்ணாமலை ஆகிய ஊராட்சிகளில் பக்க கால்வாய் அமைத்தல், காட்டாம்பூண்டி, வேங்கிக்கால், தேவனந்தல், தச்சம்பட்டு, நாரையூரில் சிறுபாலம் அமைத்தல், டி.கல்லேரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பழுதுபார்த்தல் ஆகியவை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம ஊராட்சிகளில் கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும் சின்னகல்லபாடி ஊராட்சியில் குழாய் பதித்தல், மேலத்திக்கான் ஊராட்சியில் உள்ள கீழ்அணைக்கரை பகுதியில் வாசுகிநகரில் பேவர்பிளாக் அமைத்தல், நரியாப்பட்டு ஊராட்சியில் ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றினை ஆழப்படுத்தி மின்மோட்டார் அமைத்து குழாய் அமைத்தல், தண்டரை ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் சிறுபாலம் அமைத்தல், கொளக்குடி ஊராட்சியில் பைப்லைன் விஸ்தரிப்பு பணி செய்தல் உள்ளிட்ட பணிகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1 கோடியே 42 லட்சம் வழங்கிட மன்ற அங்கீகாரம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், முருகன், தினகரன், வெங்கடேசன், அம்சா கண்ணன், காந்தி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தா பழனி மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவிபொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் (நிர்வாகம்) பிரித்திவிராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!