இளம் சாதனையாளர்களுக்கான தேசிய கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
பைல் படம்
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று நடைபெற விருந்த எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இதர பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒன்பது மற்றும் 11ம் வகுப்பு பயின்று வரும் 3093. மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் தேசிய தேர்வு முகமையால் 29.9.2023 அன்று நடத்தப்பட விருந்த YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ,
தற்போது மேற்படி எழுத்து தேர்வானது காலபற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 8 மற்றும் 10 ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை National scholarship portal ( https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணைய தளத்தினை (https://social justice.gov.in) என்ற இணையதளங்களில் தெரிந்து கொண்டு பயனடையலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu