திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு
X

108 ஆம்புலன்ஸ்

திருவண்ணாமலையில் நாளை ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

திருவண்ணாமலையில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாளை 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளன.

ஓட்டுனர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 162.5 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.

இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்ச 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூபாய் 15,235 ஆகும்.

மருத்துவ உதவியாளர் பணி

மருத்துவ உதவியாளர் பணிக்கு பிஎஸ்சி நர்சிங் அல்லது பிளஸ் டூ வகுப்பு பிறகு ஏ என், எம் டி எம் எம் எல் டி, லைப் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

19 வயதுக்கு மேல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியம் 15,435 ஆகும்.

தகுதி உள்ளவர்கள் கல்வி ஓட்டுனர் உரிமம் மற்றும் முன் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களை நேரில் எடுத்து வர வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
scope of ai in future