வருமுன் காப்போம் திட்ட முகாம்களை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் அறிவுரை

வருமுன் காப்போம் திட்ட முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, கிராம மக்களுக்கு அமைச்சர் அறிவுரை கூறினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வருமுன் காப்போம் திட்ட முகாம்களை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் அறிவுரை
X

குழந்தை நல பரிசு பெட்டகங்களை வழங்கிய அமைச்சர்

வருமுன் காப்போம் திட்ட முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிராம மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு , அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் பறையம்பட்டு ஊராட்சியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவிற்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது;

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை 2022 முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோந்தவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிராமங்களில் வசிக்கும் மக்கள் வரும்முன் காப்போம் திட்ட முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை மையத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். மேலும், குழந்தை நல பரிசுப் பெட்டகங்களை 5 பேருக்கும், 8 பேருக்கு கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

இந்த மருத்துவ சிறப்பு முகாமில், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி (செங்கம்), அம்பேத்குமார் (வந்தவாசி), சரவணன் (கலசபாக்கம்), தமிழ்நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளா் வாரிய உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செல்வக்குமாா், திருவண்ணாமலை ஒன்றியத் தலைவா் கலைவாணி கலைமணி , மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2023 1:05 AM GMT

Related News