பரபரப்பான திருவண்ணாமலை தேரடி வீதியில் கத்தி குத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடி வீதியில் காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
திருவண்ணாமலை தேரடி தெரு நகரத்தின் முக்கிய ரீதியாக விளங்கி வருகிறது. இங்கு நகைக்கடைகள் துணிக்கடைகள் உணவகங்கள் போன்ற முக்கிய நிறுவனங்கள் இருப்பதால் எப்போதும் கூட்டம் மிகுந்து காணப்படும். மேலும் அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லக்கூடிய ராஜகோபுரம் இன்று தான் உள்ளது. ஆடி வெள்ளியான நேற்று காலை முதல் திருவண்ணாமலை கோவிலுக்கும் கிரிவலம் செல்லவும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தேரடி வீதியில் குடிபோதையில் 3 பேர் வந்தனர். அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தகராறு முற்றி அதில் ஒருவருக்கு கழுத்து மற்றும் முகத்தில் கத்தி குத்து விழுந்தது ரத்தம் சொட்ட சொட்ட அவர் கீழே சாய்ந்துள்ளார்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் விசாரணையில் கத்திக்குத்துபட்டவர் பேகோபுர தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்பதும் பூ மார்க்கெட்டில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது மேலும் இச்சம்பவத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனு கடலாடியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட 2 நபர்களும் குடிபோதையில் இருப்பதால் அவர்களின் விவரம் மாற்றி மாற்றி கூறுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நகரின் இதய பகுதியாக விளங்கும் தேரடி வீதியில் இளைஞர்கள் கஞ்சா போதையில் ஒருவருக்கொருவர் கட்சியால் தாக்கி கொண்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தேரடி வீதியில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்துள்ளதாகவும் அதனால் இச்சம்பவங்கள் கேமராவில் பதிவாகவில்லை எனவும் கூறப்படுகிறது முக்கியமான இடத்தில் போலீசார் வைத்துள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கிறதா என உடனடியாக போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu