திருவண்ணாமலை அருகே சுடுகாடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சுடுகாடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தலைமை தாங்கினார். ஆரணி உதவி கலெக்டர் கவிதா முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரின் நேர்முக உதவியாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் பழைய ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனுவில் எங்களது கிராமத்தின் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சுடுகாடு அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இங்கு சுடுகாடு அமைந்தால் எங்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்படும். எனவே வேறு இடத்தில் சுடுகாடு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் சிக்கிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், எங்களது எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். எனவே நாங்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu