திருவண்ணாமலையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
X

குறைதீர்வு கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொள்ளும் கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள் மனுக்களை பெறாததால் பெட்டியில் மனுக்களை அளித்து வந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை, சமீபத்தில் அறிவித்துள்ள தமிழக அரசு குறைதீர்வு கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நேரடியாக நடைபெற்று வருகிறது.

இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். ஏராளமான பொதுமக்கள் திருமண நிதியுதவித் திட்டம், வங்கி கடனுதவி மற்றும் வருவாய்த் துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் கைப்பைகளை சோதனையிட்டு உள்ளே அனுப்பி வைத்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி , கூடுதல் ஆட்சியர் பிரதாப், உதவி ஆட்சியர் கட்டா ரவி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil