மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் வாகனம் வரும் 8 ஆம் தேதி பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு
பைல்படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் வரும் 8ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசாரால் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 8ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட 126 வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவின்படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நுழைவு கட்டணமாக ரூ. 100, முன்பணமாக ரூ. 1000 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீது பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். ரசீதுகளை இன்று மாலை 5 மணி வரை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
வாகனம் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் மட்டுமே திருப்பி தரப்படும். வாகனம் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன், 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். வாகனம் ஏலம் எடுத்ததற்கான ரசீது, அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும் இது குறித்து தகவல்களை மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 01475 233920 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று எஸ்பி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu