பொது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
வரும் 25ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் ( மாதிரி படம்)
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை;
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் எதிர்வரும் 25.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 30 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர் .
18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8 ம் வகுப்பு, 10 ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ டி , பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்,
வேலைவாய்ப்பு முகாம் அன்று தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www. tnprivatelbstn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 அலுவலக தொலைபேசி தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தைசார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu