பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் கூட்டமைப்பினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் கூட்டமைப்பினர் போராட்டம்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி, 

Protest by Deaf Associations emphasizing various demands

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லியாகத் அலி தலைமை வகித்தார்தாங்கினார்.

இதில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதத்தின்படி வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத் திறனளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவமிக்க சைகை மொழி ஆசிரியர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களின் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்திய பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர்.

மேலும் அவர்களால் வாய் பேச முடியாததால் தங்களின் கோஷங்களை வெளிகாட்டும் வகையில் விசில் ஊதி கோரிக்கையை தெரிவித்தனர். இதில் பொதுச் செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் நக்கீரன், துணை செயலாளர் பிரபு உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி, தாசில்தார் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் சைகை மொழி பெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வந்தனர். அவர் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை கேட்டு அலுவலர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் அலுவலர்கள் அளித்த பதிலை மாற்றுத் திறனாளிகளிடம் தெரிவித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் முருகேஷை நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

பின்னர் அவர்களில் 6 பேரை ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story