திருவண்ணாமலையில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம்: அமைச்சர் அறிவிப்பு

திருவண்ணாமலையில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம்: அமைச்சர் அறிவிப்பு
X
திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

நேற்று, நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்வரின் கட்டளையை ஏற்று விரைந்து செயல்பட்டதால் கொரோனா தோற்று குறைந்து வருகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நோயாளிகளுக்கு தேவையான சத்துள்ள உணவுகள் பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை பிரச்சாரத்தின் போது அறிவித்த திட்டங்கள் செயல்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக வேலூர்- செங்கம் புறவழிச்சாலை, வேட்டவலத்தில் புறவழிச்சாலை, திருவண்ணாமலையில் இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள், விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் 21 ம் தேதி நடைபெறும் போது மாண்புமிகு முதல்வரிடம் தெரிவித்து இந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!