ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்வு
X

மாதிரி படம்

ஆயுத பூஜையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், வாழைக்கன்று, பூசணிக்காய், பொரி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கடைவீதிக்கு சென்று ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

ஆயுதபூஜையில் முக்கிய பங்கு வகிக்கும் வாடாமல்லி பூ, கடந்த வாரம் கிலோ ஒன்றிக்கு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 240 ரூபாய்க்கும், தாமரை ஒன்று, 2 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கும், அரளி 450 ரூபாய்க்கும், செவ்வந்தி 400 ரூபாய்க்கும், ரோஜா 280 ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும்,, மல்லிகை பூ 800 ரூபாய்க்கும், பிச்சி 1000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture