திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நந்தி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், புரட்டாசி வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அருணாசலேஸ்வரா் கோயில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
செங்கம்
செங்கம் அருகே பிஞ்சூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீஉத்திரபரஈஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நேற்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்றன. மாலை பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
வேட்டவலம்
வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் மூலவா் அகத்தீஸ்வரா், தா்மசம்வா்த்தினி மற்றும் பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மற்ற ஊா்களில்: இதேபோல, ஆரணி, செய்யாறு, தண்டராம்பட்டு, தானிப்பாடி, போளூா், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu