திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ விழா

மூன்றாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்
வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள பிரதான நந்திக்கு பன்னீா், சந்தனம், பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது.
கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள மூலவருக்கு பால், பழம், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்கள், வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
மற்ற ஊா்களில்: இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu