திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
X

அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அருணாசலேஸ்வரா் கோயில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்..

வேட்டவலம்

வேட்டவலத்தை அடுத்த ஆவூா், ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு இளநீா், பால், தயிா், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ தீர்காசல ஈஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செய்யாறு:

செய்யாற்றில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் நந்தி பெருமான் கிழக்கு நோக்கி அருளும் பிராா்த்தனை தலமான திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தை மாத பௌர்ணமி பிரதோஷ வழிபாட்டில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகா் நாயகி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதையடுத்து பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மற்ற ஊா்களில்.. கீழ்பென்னாத்தூா், ஆரணி, தண்டராம்பட்டு, தானிப்பாடி, போளூா், செய்யாறு, வந்தவாசி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil