திருவண்ணாமலையில் போலீஸ் கேண்டீனில் டிவி திருடிய காவலர்
கைது செய்யப்பட்ட காவலர் சரத்குமார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான தமிழ்நாடு 'காவலர் பல்பொருள் அங்காடி(Police Canteen) செயல்பட்டு வருகிறது.
இந்த கேன்டீனில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இதில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், செல்போன், டி.வி. உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த அங்காடியில் கடந்த ஆண்டு நவ.10 ஆம் 3 எல்.இ.டி. டி.வி.க்கள் மற்றும் செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. பதிவு எண்களை வைத்து கண்காணித்து வந்தனர். சமீபத்தில் திருடப்பட்ட 3 செல்போன்களில் ஒரு செல்போன் சிம்கார்டு போடப்பட்டு ஆன் செய்யப்பட்டு உள்ளது. அந்த செல்போன் சென்னையில் பயன்படுத்தப்படுவதை அறிந்த திருவண்ணாமலை போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் வேலியே பயிரை மேய்ந்த கதை போல் காவலர் ஒருவரே திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
விசாரணையில் அந்த செல்போனை பயன்படுத்தியது கலசப்பாக்கம் அடுத்த அல்லியாலமங்கலம் பகுதியை சேர்ந்த இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த சரத்குமார், என்பது தெரியவந்தது.
இவர் கூடுதல் துணை கண்காணிப்பாளருக்கு ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் தான் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதை உறுதி செய்த போலீசார் அவரிடமிருந்து செல்போன்கள் மற்றும் டி.வி.க்களை பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu