திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் பணி தேர்வு

திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் பணி தேர்வு
X

தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்களிடம் சோதனையில் ஈடுபட்ட போலீசார்

திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் பணி தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினர்.

திருவண்ணாமலையில் ஆறு மையங்களில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 5233 பேர் தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும், தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக, மொத்தப் பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதி உள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, போட்டித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆன்லைனில் வெளிப்பட்டது. அதனை, சம்மந்தப்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில்திருவண்ணாமலையில் கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரி, சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி, எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மேல்நிலைப் பள்ளி, கரன் கலை, அறிவியல் கல்லூரி, கம்பன் மகளிா் கல்லூரி, சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 4,930 ஆண்கள், ஆயிரத்து 471 பெண்கள் என மொத்தம் 6,401 பேர் விண்ணப்பித்து இருந்தனா்.

காலை பொது அறிவுத் தேர்வும், பிற்பகலில் தமிழ் தேர்வும் நடைபெற்றது. விண்ணப்பதாரா்களில் 1,168 பேர் தேர்வு எழுத வரவில்லை. 5,233 பேர் மட்டுமே தேர்வு எழுதினா்.

தேர்வு மையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனா்.

தேர்வு மையத்துக்கு செல்போன், கை கடிகாரம் உள்ளிட்ட எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக 615 பேர் நியமிக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்தியபிரியா, எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் தமிழக பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி. சத்தியப்பிரியா ஆய்வில் ஈடுபட்டாா். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோா் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுவா்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி