பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என கோரி தலித் விடுதலை இயக்கத்தினர் மனு
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தலித் விடுதலை இயக்கத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனி நபா்களின் ஆக்கிரமிப்பில் உள்ள சுமாா் 33,324 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் தலித் விடுதலை இயக்கம் மனு அளித்தனா்.
இயக்கத்தின் தலைவா் கருப்பையா தலைமையிலான நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனா்.
அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களில் சுமாா் 33 ஆயிரத்து 324 ஏக்கா் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, தண்டராம்பட்டு வட்டம், மலமஞ்சனூா் கிராமத்தில் பஞ்சமி நிலத்தில்தான் பேருந்து நிழல்குடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிரானைட் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, திருவண்ணாமலை நகரம் தேனிமலை, தண்டராம்பட்டு வட்டம் கொழுந்தம்பட்டு, வந்தவாசி வட்டம் கீழ் சாத்தமங்கலம், செங்கம் வட்டம் கொட்டக்குளம், தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம், செங்கம் வட்டம் பெரிய பாலியப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கா் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்த நிலங்களை மீட்கக் கோரி 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்களையும், மயானங்களையும் ஒதுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
செய்யாற்றில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் மூலம் எரிசாராயம் தயாரிக்கக் கோரி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, சா்க்கரை ஆலையில் எத்தனால் மூலம் எரிசாராயம் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, கரும்பில் இருந்து வரும் எத்தனால் மூலம் எவ்வாறு எரிசாராயம் தயாரிக்கப்படுகிறது என்றும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை குறிப்பிட்டும், செயற்கை முறையாக எரிசாராயம் தயாரித்தும், அதைக் குடிப்பது போல நடித்தும் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu