திருவண்ணாமலையில் டெங்கு களப்பணியாளர்கள் சம்பள பாக்கி வழங்க கோரி மனு

திருவண்ணாமலையில் டெங்கு களப்பணியாளர்கள் சம்பள பாக்கி வழங்க கோரி மனு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த டெங்கு களப்பணியாளர்கள்.

டெங்கு களப்பணியாளர்கள் 6 மாத சம்பள பாக்கியை வழங்க கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 650 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 650 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

6 மாத சம்பள பாக்கி கேட்டு மனு அளித்த ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு களப்பணியாளர்கள் செங்கம் தாலுகா மேல்பள்ளிப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு களப்பணியாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்

மேல்பள்ளிப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்களிலும் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக சிக்கன் குனியா, டெங்கு மற்றும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, அவர்களுக்கு உணவு வழங்குவது, பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை 119-க்கும் மேற்பட்ட மஸ்தூர்கள் வேலை செய்து வருகிறோம்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 119 பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்த சம்பளம் வழங்கப்படவில்லை. பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் பணம் இல்லை என்று தட்டிகழிக்கின்றர்.

இப்பணியில் படித்த இளைஞர்கள் இச்சம்பளத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். பல தொழிலாளர்களுக்கு திருமணம் ஆகியுள்ளது. 119 பேரின் 6 மாத சம்பள பாக்கியை உடனே வழங்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..