திருவண்ணாமலை காேவிலில் நீண்ட நாளைக்கு பிறகு அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை காேவிலில் நீண்ட நாளைக்கு பிறகு அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி
X
அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திருக்கோவில்கள் திறக்கலாம் என்று நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் விடுமுறை தினமான இந்த மூன்று நாட்களிலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. இன்று காலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதிகாலை முதல் கிரிவலத்திற்கு பக்தர்கள் அதிகமாக செல்வதை காண முடிந்தது. நீண்ட நாளைக்குப் பிறகு திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளில், வியாபார நிறுவனங்களிலும், வெளியூர் மக்கள் வந்து செல்வதை காண முடிந்தது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story