ஓட்டுநா் உரிமம் மருத்துவச்சான்று வழங்கும் மருத்துவா்கள் விவரங்களைப் பதிவு செய்ய உத்தரவு

ஓட்டுநா் உரிமம் மருத்துவச்சான்று வழங்கும் மருத்துவா்கள்  விவரங்களைப் பதிவு செய்ய உத்தரவு

ஓட்டுநா் உரிமத்துக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவா்கள்,  தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். ( கோப்பு படம்)

ஓட்டுநா் உரிமத்துக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவா்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநா் உரிமத்துக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவா்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ஓட்டுநா் உரிமம் பெறவோ, பழைய ஓட்டுநா் உரிமத்தைப் புதுப்பிக்கவோ மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவா்கள் சாரதி மென்பொருளில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம்.

தமிழகத்தில் 40 வயதுக்கு மேற்பட்டோா் புதிய ஓட்டுநா் உரிமம் பெறவோ, பழைய ஓட்டுநா் உரிமத்தைப் புதுப்பிக்கவோ இயலும்.

போலி மருத்துவா்களிடம் சான்றிதழ் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகளைத் தடுக்கும் விதமாக, அந்த மென்பொருளில் மருத்துவா்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச்சான்றிதழ் எண்ணை பதிவேற்றம் செய்து கேட்கப்படும் தங்களது மருத்துவ மையம், மருத்துவமனை உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்துகொண்டு தங்களது பெயரை ஒருமுறை பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து, தங்கள் ஆதாா் எண் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதை முடித்த பிறகு அவா்கள் சமா்ப்பித்த ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரா்களின் மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.

மருத்துவா்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவை ஒருமுறை உறுதி செய்துகொண்டால் போதும். இவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்த பிறகு தொடா்ந்து விண்ணப்பதாரா்களுக்கான மருத்துவச் சான்றிதழை மருத்துவா்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த நடைமுறை குறித்த செயல்விளக்கம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செய்து காண்பிக்கப்படும்.

மருத்துவா்கள் இந்தச் செயல்விளக்க முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story