திருவண்ணாமலை: நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாவட்ட மைய நூலகம் திறந்தது

திருவண்ணாமலை: நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாவட்ட மைய நூலகம் திறந்தது
X
புத்தகங்களை வாசகர்கள் தேர்ந்தெடுக்க தற்போது அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்களே அந்த புத்தகத்தை தேடி எடுத்துத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. விடுமுறை நாளான இன்று திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்திற்கு பொதுமக்கள் ஒரு சிலரே வந்திருந்தனர். பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. பொதுவாக திருவண்ணாமலை நூலகத்தில் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி நேரடியாக சென்று புத்தகங்களை வாசகர்கள் தேர்ந்தெடுக்க தற்போது அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்களே அந்த புத்தகத்தை தேடி எடுத்துத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு கிருமிநாசினி மற்றும் சோப்பு மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story