திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் குறித்த கருத்தரங்கம்

திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் குறித்த கருத்தரங்கம்
X

கருத்தரங்கில் உரையாற்றும் தொழில் வளர்ச்சி மையம் துணை இயக்குனர் கார்த்திகேயன் சிவசண்முகம்

அருணை பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது

திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரியின் சார்பில் இன்று திறன் மேம்பாட்டு, வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தொழில் வளர்ச்சி மையம் துணை இயக்குனர் கார்த்திகேயன் சிவசண்முகம், கலந்துகொண்டு உரையாற்றும்போது, கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டில் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்க்கு பிறகு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் இந்தியாவின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முற்றிலும் புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டன, விரைவான தொழில்நுட்ப மாற்றம் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவும், அதே வேலையில் நீங்கள் தொழிலில் ஒரு தொழிலை உருவாக்க விரும்பினால் புதிய இடங்களில் வளர்ச்சியும் அவசியமாகிறது என்று கூறினார்.

தொழில் வளர்ச்சி மையம் தஇணை இயக்குனர் முனைவர் மோகனகிருஷ்ணன் பேசும்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பினால் ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது. ஐடி துறையில் எதிர்காலம் பாதுகாப்பானது. அதற்கு தேவையான தொழில் துறை நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விஐடி பேராசிரியர் முனைவர் சுபத்ரா தேவி சைபர் பாதுகாப்பு, ஊடுருவல் சோதனை, பாதுகாப்பு , தணிக்கை உள்கட்டமைப்பு, கிளவுட் ஸ்டோரேஜ், நெட்வொர்க்கிங், சந்தையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இவ்விழாவிற்கு கல்லூரியின் துணை தலைவர் எ. வ. குமரன், பதிவாளர் முனைவர் சத்யசீலன் , கல்லூரி முதல்வர், முனைவர் ரவிச்சந்திரன், துறைத்தலைவர் முனைவர் ரவிச்சந்திரன், முதலாமாண்டு மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business