திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அறிவிப்பு
X

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை கால சிறப்பு முகாம்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி , மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவமுகாம்கள் நடத்த பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை திட்டமிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமுகாம்கள் நடத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் 18 நடமாடும் மருத்துவக்குழுக்களைக் கொண்டு தலா 3 மருத்துவமுகாம்கள் என தினசரி 60 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இந்த மருத்துவமுகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,காய்ச்சல் கண்டவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிக முக்கி யமானதாகும் . மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி இரத்த பரிசோதனைகள் செய்து கொள்ளவேண்டும் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படும் பட்சத்தில் ஒஆர்எஸ் கரைசல் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீரை பயன்படுத்தவேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குளோரின் செறிவூட்டப்பட்ட குடிநீரை பருக வேண்டும். வீட்டில் மழைநீர் தேங்காத வண்ணம் கவனமுடன் இருக்கவேண்டும். இதன்மூலம் கொசுப்புழு உற்பத்தியினை தவிர்க்கமுடியும். காய்ச்சல், பசியின்மை , அ தி க உடல்சோர்வு, தலைசுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், குமட்டல்/ வாந்தி, வயிற்றுவலி, வாய், பல் ஈறுகள் மற்றும் மூக்கில் இரத்தம் கசிதல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாம்களிலோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உரிய மருத்துவ சிகிச்சை பெறவேண்டும். எனவே பொதுமக்கள் மருத்துவமுகாமினை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!