/* */

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

HIGHLIGHTS

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு
X

பாஜகவை வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்

தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அமல்படுத்தவில்லை என்று, பாமக நிறுவனா் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டினாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமனை ஆதரித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை நேற்று இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

உலகமே வியந்து பார்க்கக்கூடிய பிரதமராக ஆச்சரியமாக பார்க்கக்கூடிய பிரதமரை பெற்றுள்ளோம், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் விவசாயிகளின் வாழ்வு வளம்பெறவும், இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறவும் பயோ-எத்தனால் தொழில்சாலையை தொடங்குவேன். திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைப்பேன் என பல்வேறு வாக்குறுதிகளை வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் அளித்துள்ளாா். பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருகவும், விவசாயம், கல்வி, தொழில் ஆகியவை வளம் பெறவும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படும் என்று வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறியிருக்கிறாா்.

மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக 3-ஆக பிரிக்க வேண்டும். இந்த மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. தமிழகத்தில் இருந்த 32 மாவட்டங்கள் 38-ஆக அதிகரித்ததற்கு காரணம் பாமக. மேலும் 6 மாவட்டங்கள் உருவாக போராடியது பாமக. திருவண்ணாமலை மாவட்டமும் மூன்றாகப் பிரிக்கப்படும். மத்தியில் பாஜக ஆட்சி அமையும். அப்போது, இந்தத் தொகுதிக்கான திட்டங்களை அஸ்வத்தாமன் கேட்டுப் பெறுவாா். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் திமுக 500 வாக்குறுதிகளைக் கொடுத்தது. இதில் 5 திட்டங்களையாவது நிறைவேற்றினாா்களா என்றால் இல்லை.

குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாததால் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடை தான் நடக்கிறது, அந்த வருமானத்தில் தான் தமிழக அரசு நடத்துகிறார்கள் , அந்த வகையில் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் என்ன என ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்காக நான் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோட்டைக்கு சென்று பேசினேன். 8 அமைச்சர்கள் 10 செயலாளர்கள் உள்ளிட்டவர்களிடம் அரை மணி நேரம் பேசினேன். இடம் ஒதுக்கீடு வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 35 நிமிடம் அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை விட்டால் நாதியில்லை என்று முதல்வரிடம் கூறினேன். ஆனால் உழைக்கும் மக்களுக்கும் பாட்டாளி மக்களுக்கும் எதுவுமே செய்யக்கூடாது என்று திமுக உறுதியாக இருந்ததால் எதுவும் செய்யவில்லை.

திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் பாராளுமன்றம் சென்றால் அவர் சொன்ன திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும், தாமரை சின்னத்தில் வாக்களித்து அஸ்வத்தாமனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட பாமக செயலா் ஏந்தல் பக்தவச்சலம் தலைமை வகித்தாா். பாமக மாநில செயற்குழு உறுப்பினா் காளிதாஸ், மாவட்டச் செயலா் பாண்டியன், பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில நிா்வாகி டி.எஸ்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 4 April 2024 1:37 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 2. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 3. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 4. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 5. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 7. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
 8. இந்தியா
  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
 9. லைஃப்ஸ்டைல்
  தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
 10. லைஃப்ஸ்டைல்
  உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...