போக்குவரத்து துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் கருணாநிதி : அமைச்சர் பெருமிதம்..!

போக்குவரத்து துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் கருணாநிதி : அமைச்சர் பெருமிதம்..!
X

புதிய பேருந்துகளைகொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள்

போக்குவரத்து துறைக்கு மறுமலர்ச்சி கொண்டு வந்தவர் கருணாநிதி என்று புதிய பேருந்துகளை தொடங்கி வைத்து அமைச்சர் பேசினார்

தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக 6 புதிய மகளிர் விடியல் பயண நகரப் பேருந்துகளையும் மற்றும் 26 புதிய புறநகரப் பேருந்துகளையும் என மொத்தம் 32 புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் விழா திருவண்ணாமலை ஈசான்ய மைதான திடலில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, அம்பேத்குமார், ஜோதி, மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 32 புதிய பேருந்துகளைகொடியசைத்து தொடங்கி வைத்து விழாவில் சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,

தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களில் சிறப்பாக செயல்படும் மண்டலமாக திருவண்ணாமலை திகழ்கிறது , திருவண்ணாமலைக்கு பல்வே று மாவட்ட மாநிலங்களில் இருந்து பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களி ல் பக்தர்கள் வருவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிக பேருந்துகள் உள்ள மாநிலம் எது என்றால் தமிழ்நாடு தான்.

தமிழ்நாடு முதலமைச்சர் 7 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்காகஆணையிட்டுள்ளார். அதில் முதல் கட்டமாக 1500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். அதேபோல் மின்சார பேருந்துகளும் வாங்கப்பட உள்ளது. மகளிர் விடியல் பயண திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்மாதிரியாக இருக்கிறது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு முதலமைச்சர் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். இந்த 3 ஆண்டுகளில் 5 கோடிக்கு மேல் மகளி ர் கட்டணமில்லா விடியல் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும், என்னையும் எந்தகாலத்திலும் பிரித்து பார்க்கவே முடியாது. போக்குவரத்து துறைக்கு மறுமலர்ச்சி கொண்டு வந்தவர் கலைஞர். . போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து போக்குவரத்து துறைக்கு ஒரு மறுமலர்ச்சி கொண்டுவந்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி. அவர் முதலமைச்சராக இருந்த போது 18 ஆயிரம் பேருந்துகளை கொண்டு லாபகரமாக இயக்கப்பட்டு வந்தது. இன்று போக்குவரத்து கழகத்திற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 800 கோடி பணம் கொடுத்துள்ளார்.

ஆனாலும் போக்குவரத்து துறை நஷ்டத்தில் தான் இருக்கிறது. அதனால் இந்த துறை மீண்டும் லாபகரமான துறையாக வரவேண்டும் என்றால் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் மனது வைக்க வேண்டும். அப்போது தான் இந்த துறையை லாபகரமாக கொண்டுவர முடியும். ஒரு குடும்பத்தினுடைய பொ ருளாதாரத்தை உயர்த்துவதற்கும் உதவியாக போக்குவரத்து துறை இருக்கிறது. கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்களினால் ஒரு குடும்பத்திற்கு ரூ.1000 கிடைக்கிறது. இதனால் அவர்களின் பொருளாதாரம் முன்னேறுகிறது. இலவசமாக பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயனம் செய்யும் திட்டத்தைகொண்டு வந்தது திமுக தான்.

தற்போது மலைபகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் அனுமதி வழங்கியதற்கு அனைவரது சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, விழப்புரம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, நகர்மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பா.ம.க. கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் ரகசிய பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!