பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய கட்டிடங்கள்: காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த துணை சபாநாயகர்
தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.264.15 கோடியில் வகுப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள், சிறைத்துறை சார்பில் ரூ.9.45 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களைமுதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ரூபாய் 19.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளாக கட்டிடம் மற்றும் சேமிப்பு கிடங்கு கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த முதன்மை கல்வி அலுவலக சிறப்பம்சங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்தன. மாவட்ட கல்வி அலுவலகம் ,தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி கல்வித்துறை அலுவலகம், தனியார் பள்ளிகள் கல்வி அலுவலகம், என தனித்தனியாக இயங்கி வந்த நிலையில் தற்போது ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கட்டிடத்தில் , மின் தூக்கி வசதி மற்றும் ஏசி வசதிகளுடன் கூடிய மாநாட்டு கூட்ட அரங்கம், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வினாதாள்கள் பாதுகாப்பதற்கான சிறப்பு அறைகள், உள்ளிட்டவைகள் பிரதானமாக அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் உதவி இயக்குனர் அரசு தேர்வுகள் அலுவலகம், முதல் தளத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்கக் கல்வி திருவண்ணாமலை மற்றும் வட்டார கல்வி அலுவலகம், இரண்டாம் தளத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் தனியார் பள்ளிகள் திருவண்ணாமலை மற்றும் கூட்ட அரங்கம் உள்ளிட்டவைகளோடு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளாக கட்டிடம் அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu