கணவன்-மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க

கணவன்-மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க
X

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் (கோப்பு படம்).

குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர, கடன் தொல்லையில் இருந்து விடுபட மாசி மகம் நாளில் கிரிவலம் வர வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

பல திருத்தலங்களில் பெளர்ணமி கிரிவலம் சென்று, வழிபடும் வழக்கம் பக்தர்களிடம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை போன்ற புண்ணிய தலங்களில் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லலாம் என்றாலும், பெளர்ணமி கிரிவலத்திற்கு மகத்துவம் அதிகம்.

மாசி மகத்தன்று பெளர்ணமி கிரிவலம் வருபவர்களுக்கு மறுபிறவி என்பது ஏற்படாது. அது மட்டுமின்றி, அவர்கள் வாழும் வாழும் நாட்களில் அனைத்து விதமான நலன்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ முடியும்.

இந்த ஆண்டு மாசி மாத பெளர்ணமி தினமான மாசி மகம், பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 முதல் பிப்ரவரி 24ம் தேதி மாலை 06.51 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. அதே சமயம் பிப்ரவரி 23ம் தேதி இரவு 08.40 மணி துவங்கி, பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் பிப்ரவரி 24ம் தேதி நாள் முழுவதும் பெளர்ணமி திதியும், மகம் நட்சத்திரமும் உள்ளது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 5 மணி துவங்கி, பிப்ரவரி 24ம் தேதி மாலை 06.30 மணி வரையிலான நேரம் கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

மாசி மாதத்தில் வரும் பெளர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளையே நாம் மாசி மகமாக கொண்டாடி வருகிறோம். மாசி மகம் என்பது ஈசனுடன் மீண்டும் இணைவதற்காக அம்பிகை, கடுமையான தவம் இருந்து, தட்சனின் மகளாக தாட்சாயினியாக அவதாரம் செய்த நாளாகும்.

மாசி மகம் அன்று காலை முதல் மாலை வரை அனைத்து நேரங்களுமே புனித நீராட ஏற்ற நேரமாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாலையில் புனித நீராடி, சூரிய நமஸ்தாரம் செய்து வழிபடுவது இரு மடங்கு அதிக பலனை கொடுக்கும். பித்ரு தர்ப்பணம் செய்பவர்கள் உச்சி பொழுதிற்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து விட வேண்டும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், நீர் நிலைகள், கூடுதுறைகள் ஆகியவற்றிற்கு சென்று பித்ருக்களை நினைத்து, நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என வேண்டிக் கொண்டு, எள்ளும், தண்ணீரும் இறைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதனால் பிரச்சனைகள் தீர வேண்டும் என்பவர்களுக்கும், இறையருள் பெற வேண்டும் என்பவர்களுக்கும், முன்னோர்களின் ஆசிகளை பெற வேண்டும் என்பவர்களுக்கும் ஏற்ற நாளாக உள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து, பெளர்ணமி கிரிவலம் வருவது அளவில்லாத பலன்களை அள்ளிக் கொடுப்பதுடன் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கக் கூடியது.

இந்த நாளில் திருவண்ணாமலை திருத்தலம் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், பழநி, சதுரகிரி மலை, சென்னிமலை போன்ற மலை உள்ள திருத்தலங்களிலும் கிரிவலம் வந்து வழிபடுவது வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கக் கூடிய தன்மை கொண்டதாகும். மாசி மகத்தன்று பெளர்ணமி கிரிவலம் வருபவர்களுக்கு மறுபிறவி என்பது ஏற்படாது. அது மட்டுமின்றி, அவர்கள் வாழும் வாழும் நாட்களில் அனைத்து விதமான நலன்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ முடியும்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!