/* */

திருவண்ணாமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
X

கோப்புப்படம் 

தேசிய பேரிடர் மீட்பு படை என்பது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மீட்பு படையாகும். நாடு முழுவதும் 16 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை அமைந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களிலும் புதுச்சேரி, அந்தமான் தீவு மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் போன்ற இடங்களில் பேரிடர் மற்றும் பேரிடர் சம்பந்தமான நிகழ்வு ஏற்பட்டால் நான்காம் படை பிரிவை சேர்ந்த மீட்பு பணியாளர்கள் அவ்விடங்களுக்கு சென்று மீட்பு பணியை தொடர்வார்கள்.

இந்நிலையில் நான்காம் படை பிரிவை சேர்ந்த மீட்பு பணி வீரர்கள் திருவண்ணாமலைக்கு வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் அதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு பணிகள் பேரிடர் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினர்.

துணை படைத்தளபதி கெய்க்வாட் சங்கித், குழு தளபதி தீஸ்குமார், பாதுகாப்பு அதிகாரி மணிகண்டன் மற்றும் மீட்பு படைவீரர்கள் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

நிலநடுக்கத்தால் கட்டட ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பல துறை அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடத்தினார்கள்.

மீட்பு பணியின் போது பலதரப்பட்ட உபகரணங்களும் உயரமான கட்டிடங்களில் இருந்து சிக்கியவர்களை பாதுகாப்பாக கீழே இறக்கும் ஒத்திகையையும் நடத்திக் காட்டினர்.

விழாவின் முடிவில் செஞ்சிலுவை சங்கத்தால் அனைத்து வீரர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்கள் சுகாதார பெட்டகம் வழங்கினார்.

மேலும் மீட்பு படையினருக்கு நன்றியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மரம் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, உதவி ஆட்சியர் பயிற்சி கலைவாணி, செஞ்சிலுவை சங்க துணைத் தலைவர் ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2023 1:59 AM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
 2. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
 4. ஈரோடு
  பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...
 5. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
 6. ஈரோடு
  ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும்...
 7. ஈரோடு
  பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
 9. நாமக்கல்
  வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
 10. கரூர்
  கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...