மகளிர் சுய உதவி குழு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மகளிர் சுய உதவி குழு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர் வேலு 

திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்

தமிழக முதல்வர் இன்றுதிருத்தணியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் அமைச்சர் எ வ.வேலு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூபாய் 30.31 கோடி மதிப்பிலான கடனுதவிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், சந்திரா, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி