திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
X

நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் வேலு 

திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட 615 பயனாளிகளுக்கு 8.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் கிரி, தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட 615 பயனாளிகளுக்கு 8.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகனை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மேலும், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒதுக்கீடுக்காக 1921 ஆம் ஆண்டு நீதிக் கட்சி காலத்தில் இருந்து போராடியிருக்கிறோம். தொடர்ந்து பெரியார் அதற்காக போராடினார். அவரது போராட்டத்துக்கு அரணாக இருந்த காமராஜர், இடஒதுக்கீட்டை வழங்கினார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர். ஆனாலும், இடஒதுக்கீட்டை ஏற்று அரசியல் அமைப்பு சட்டத்தில் 1951ஆம் ஆண்டில் திருத்தத்தை அப்போதைய பிரதமர் நேரு கொண்டு வந்தார். எனவே, இடஒதுக்கீட்டுக்கு முதன்முதலில் முறையிட்டது தமிழ்நாடுதான்.

இட ஒதுக்கீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. நம்முடைய குழந்தைகள் அரசு பணிகளுக்கு வந்திருக்க முடியாது. இந்த வரலாறுகளை இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

அதேபோன்று கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அதிக அளவில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியதிலும், முதியோர் உதவித் தொகை வழங்கியதிலும் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்தது. மீண்டும் அதே போன்ற நிலையை நாம் அடைய வேண்டும். அதற்காக, அரசு அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். பட்டா வழங்கியதும், அதற்கான கணக்குகளை அரசு பதிவேட்டில் ஏற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மாநிலத்தின் சராசரி 77 சதவீதம். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 80.8 சதவீதத்தை அடைந்திருக்கிறோம். நூறு சதவீத இலக்கை அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதன் ஆட்சியர் பிரதாப், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!