மலைவாழ் மக்களுக்கான நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்கள் துவக்கம்

மலைவாழ் மக்களுக்கான நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்கள் துவக்கம்
X

நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் மலைவாழ் மக்களுக்கான நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்கள் அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் மலைவாழ் மக்களுக்கான 2 நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முகேஷ் , திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை , சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி , மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி , கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!