திருவண்ணாமலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் வேலு தீவிர பிரசாரம்..!

திருவண்ணாமலையில்  திமுக வேட்பாளரை  ஆதரித்து அமைச்சர் வேலு தீவிர பிரசாரம்..!
X

அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு வாக்கு சேகரித்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை ஆன்மீக பூமி என்பதால் ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்திற்கும் அண்ணாமலையார் திருக்கோயில் முன்பிருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றார் அமைச்சர் வேலு.

இந்தியா கூட்டணி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு திருவண்ணாமலை நகரில் முதல் பிரசாரத்தை தொடங்கினார்.

ராஜகோபுரம் அருகே தொடங்கிய தேர்தல் பிரசாரம் தேரடி வீதி திருடன் வீதி திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அமைச்சர் வேலு தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டவாறு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து பெரிய கடை தெரு காமராஜர் சிலை அருகில் உள்ள கடைகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் பொதுமக்களிடம் வழங்கி புதிய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

முன்னதாக ராஜ கோபுரம் அருகே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர் வேலு பேசியதாவது;

திருவண்ணாமலை ஆன்மீக பூமி என்பதால் ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்திற்கும் அண்ணாமலையார் திருக்கோயில் முன்பிருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன்.

அதன்படி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதே அண்ணாமலையார் கோவில் முன்பிருந்து பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற வாக்காளர்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டு காலமாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செய்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை நகராட்சியாக 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த திருவண்ணாமலை நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சி ஆக நமது முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்கள். அழிக்க முடியாத ஒரு சரித்திரத்தை திமுக திராவிட மாநில ஆட்சியில் முதல்வர் செய்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ஆசிரமங்கள், கிரிவலம் என நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ஆன்மீக பக்தர்கள் ,வியாபாரிகள்,பொதுமக்கள் என்னிடம் கூறினர் . அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்வரின் ஆணையை பெற்று காந்திநகர் பைபாஸ் பகுதியில் புதிய காய்கறி மார்க்கெட் பணிகள் நடைபெற்று வருகிறது..

அதேபோல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தை தற்போது பல கோடி மதிப்பீட்டில் திண்டிவனம் சாலையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கட்டிக்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திமுக ஆட்சியில் திருவண்ணாமலையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மறைந்த அம்மையார் ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழ்நாட்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் திருவண்ணாமலைக்கு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஏதேனும் ஒன்று செய்ததுண்டா, ஆட்சியர் அலுவலகம் ,மருத்துவக் கல்லூரி ,மருத்துவமனை, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம், போக்குவரத்து மண்டல அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசுதான்.

இந்த மாவட்டத்திற்கு எதுவும் செய்யாத அதிமுக அரசு எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் உளுந்தூர்பேட்டையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலை தொல்பொருள் துறையிடம் ஒப்படைப்பேன் என கூறியுள்ளாராம். திருவண்ணாமலை மக்களின் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு முன்னாள் முதல்வர் கலைஞரின் துணையோடு அண்ணாமலையார் திருக்கோயில் தொல்பொருள் துறையிடமிருந்து மீட்டு அறநிலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பேசிய அமைச்சர் அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலை ஆன்மீக மக்களிடம் தான் இருக்கும் என கூறினார்.

பாஜகவை இரண்டாவது இடத்திற்கு வர அதிமுக நண்பர்கள் இடம் கொடுத்து விடாதீர்கள்

தொடர்ந்து பேசிய அமைச்சர் பாஜகவை இரண்டாவது இடத்திற்கு வர அதிமுக நண்பர்கள் இடம் கொடுத்து விடாதீர்கள் . அதிமுக தான் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இரண்டாவது இடத்திற்கு வர வேண்டும் என்பது எனது ஆசை என கூறினார்.

திருவண்ணாமலையில் முதல்வர் கலந்து கொண்ட பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு லட்சக்கணக்கில் பொதுமக்கள் திரளாக வருகை தந்ததற்கும் உழைத்த அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல் மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story