திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
X

மாணவ மாணவிகளின் வாசிப்பு திறனை ஆய்வு செய்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகம் மற்றும் விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திங்கட்கிழமை திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உரையாடினார்.

பள்ளி வளாகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியின் கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் . கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாதிரி பள்ளி மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடம் பள்ளி மற்றும் விடுதியில் தேவையான வசதிகள் இருக்கிறதா என கேட்டறிந்தார். மேலும், விடுதியை பராமரிக்கும் ஆசிரியரிடம் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என விசாரித்தார்.

செங்கம்

தொடர்ந்து செங்கம் அடுத்த சே.அகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கினார். பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதா என பார்வையிட்டார்.

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஆகியவை தூய்மையாக தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

கலசப்பாக்கம்

இதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் அடுத்த மேல்வன்னியூரில் உள்ள அரசு பள்ளியிலும் அமைச்சர் அன்பில்மகேஷ் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கிய காலை சிற்றுண்டிய ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளின் வாசிப்புத்திறனையும் ஆய்வு செய்த அமைச்சர், மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.

வந்தவாசி

வந்தவாசியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் தேவை என்ற ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!