கிரிவலப் பாதையை மேம்படுத்தும் பணி மேற்கொள்வது குறித்து அமைச்சா் ஆய்வு

கிரிவலப் பாதையை மேம்படுத்தும் பணி மேற்கொள்வது குறித்து அமைச்சா் ஆய்வு
X

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா்

Thiruvannamalai Girivalam -கிரிவலப் பாதையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா்

Thiruvannamalai Girivalam -திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக செயல்பட்டு வரும் 80 கடைகளை தற்காலிகமாக வடசன்னதி ஒத்தவாடை தெருவில் அமைக்க வலியுறுத்தினார்.

தொடர்ந்து ராஜகோபுரம் முன்பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சாலையோர வியாபாரிகளுக்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அந்த இடத்தை முழுவதுமாக பேவர் பிளாக் அமைத்து எஞ்சியுள்ள இடத்தில் கார் பார்க்கிங் ஏற்படுத்துதல், இருபுறமும் தற்காலிக கடைகள் அமைத்து தர இடம் தேர்வு செய்து இப்பணிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தென்சன்னதி ஒத்தவாடை தெருவில் உள்ள குளியலறை, கழிப்பறைகள் சீரமைக்கப்படும். பக்தா்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்களை அமைக்கப்படும் என்றாா்.

தீயணைப்புத்துறையின் மூலம் அவசர காலத்தில் பயன்படுத்தும் தீயணைப்பு ஊர்தி எளிதில் சென்று வரும் வகையில் நுழைவுப்பகுதியை அகலப்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின் போது, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்கன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அசோக்குமாா், கோட்டாட்சியா் வெற்றிவேல், நகராட்சி ஆணையா் முருகேசன், நகா்மன்ற துணைத் தலைவா் ராஜாங்கம் , தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நிர்வாகிகள் பிரியா விஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
என்ன உங்களுக்கு சிலேட் பென்சில் சாப்புற பழக்கம் இருக்கா...? அச்சச்சோ அப்டினா இது தெரிஞ்சே ஆகணுமே....!