சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு
சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை வழியாகவே திருச்சிக்கு பஸ் உள்ளிட்ட வகனங்கள் சென்று வருகின்றன. அதைவிட குறுகிய நேரத்தில் திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருவம், கள்ளக்குறிச்சி, அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு செல்லலாம். எனவே இந்த வழிதடத்தில் உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை சார்ந்த அதிகாரிகளுடன் கடந்த அக்டோபர் மாதத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் 89 கிலோ மீட்டர் தூரம் ஏற்கனவே உள்ள 7 மீட்டர் அகலமுள்ள சாலையை 10 மீட்டராக அகலப்படுத்தி குறைந்த நேரத்தில் விரைவாக செல்ல இருவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கண்ணமடையான் வனப்பகுதியில் இருந்து முருக்கம்பாடி வரை சுமார் 13.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 7 மீட்டர் அகலமுள்ள சாலையை 10 மீட்டராக அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நவம்பட்டு பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், இன்ப நாதன் மற்றும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu