மக்களவை தேர்தல் திருவண்ணாமலையில் ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கின் கதவுகளை திறந்த மாவட்ட கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு அஞ்சல் வாக்கு சீட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் இவ்விரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டத்தின் 12 இடங்களில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் 11,408 பேர் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்பில், தேர்தல் அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை செலுத்தும் முறை, வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணி, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவு முறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் விளக்கி கூறினர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு அஞ்சல் வாக்கு சீட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆரணி நாடாளுமன்றத் தேர்தல் அலுவலர் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ,கூடுதல் ஆட்சியர் ரிஷப், வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், நேர்முக உதவியாளர்கள் ,அஞ்சல் வாக்கு சீட்டு தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை முதல் ரேண்டமைசேசன் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக, 11. திருவண்ணாமலை மற்றும் 12. ஆரணி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ”முதல் ரேண்டமைசேசன்” (First randomization) பணி மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கின் அறைக்கதவுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் திறக்கப்பட்டு, 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உரிய பாதுகாப்புடன் அனுப்பப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu