அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்
X

சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர்  

Manickavasagar Festival at Annamalaiyar Temple -மார்கழி மாதத்தில் தான் சிவபெருமானின் பெருமையை சொல்லும் திருவெம்பாவை பாடல்களை ஆதி அண்ணாமலையில் மாணிக்கவாசகர் இயற்றினார்

Manickavasagar Festival at Annamalaiyar Temple -திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகருக்கு மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவையொட்டி பத்து நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மாணிக்கவாசகர் விழா நேற்று மாலை துவங்கியது, விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாணிக்கவாசகர் ஆருத்ரா தரிசனத்தன்று ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வருவர்

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட, மகா தீப மை நடராஜருக்கு வைத்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் இருக்கும் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் தங்கியிருந்தார். அப்போதுதான் அவர் சிவபெருமானின் பெருமையை சொல்லும் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார்.

சிவபெருமான் திருவண்ணாமலையில் அடியும் முடியும் காண முடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்தும் வகையில்,

"ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே" என பாடினார். அவர் மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடினார். வைணவத்தில் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடியப்படி தனது தோழியர்களுடன் ஆற்றுக்கு குளிக்க செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதுபோல சைவத்தில் சிவபெருமானை பெண்கள் மார்கழி மாதம் புகழ்ந்து பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை படைத்தார்.

ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்துக்கு மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் என்று பெயர். 9-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண்கள் அந்த தீர்த்தக்குளத்தில் நீராடி இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு "பாவை நோன்பு" இருப்பது வழக்கமாகும். அந்த பெண்கள் சிவபெருமானின் சிறப்புகளை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெம்பாவையை படைத்தார். அந்த பாடல்களை திருவண்ணாமலையில் உள்ள பெண்கள் பாடி அண்ணாமலையாரை துதித்தனர். அந்த பாடல்களை கேட்டு சிவபெருமானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உள்ளம் உருகிய அவர் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார்.

மாணிக்கவாசகர் தமிழ்நாட்டில் எத்தனையோ தலத்துக்கு சென்று இருந்தாலும் திருவண்ணாமலை தலத்தில் அவர் இருந்த நாட்கள் தனித்துவம் வாய்ந்தவை. திருவெம்பாவை உருவாக அந்த நாட்கள்தான் காரணமாக இருந்தன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!