வைகாசி அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம்!

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக திருவண்ணாமலை நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் வைகாசி அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம், வெகு விமர்சையாக, நடைபெற்றது.
இந்த சிறப்பு அபிஷேகத்தை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசை தினத்தன்று, கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, வைகாசி அமாவாசை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்திக்கு மகா அபிேஷகம் நடைபெற்றது.
அரிசி மாவு, மஞ்சள் தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் 1000 லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு பிரம்மாண்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக சுமார் 20 வகையான பூக்களை கொண்டு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித கலசத்தில் உள்ள நீ ரை மூலவரான அண்ணாமலையர் , உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu