மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பா.ஜ.க.விற்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக  பா.ஜ.க.விற்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
X

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஸ்ரீமதி மரணத்தில் மட்டும் கருத்து தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பா.ஜ.க.விற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறவுள்ள ஒற்றுமை பாதயாத்திரை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி- காஷ்மீர் வரை இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஒற்றுமையாக இருக்கும் இந்தியர்களை பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ். தத்துவத்திற்கு எதிராகவும், இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

கனியாமூர் பள்ளி மாணவி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில் இதுவரை பா.ஜ.க. தலைவர் எவ்வித கருத்தும் கூறவில்லை.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை. ஏற்கனவே ஒரு குழந்தை இறப்பிற்கு உச்சநீதிமன்றம் வரை சென்றவர்கள் கனியாமூர் பள்ளி மாணவி இறப்பிற்கு மட்டும் ஆர்வம் காட்டாமல் இருப்பதின் மர்மம் என்ன? ஆர்.எஸ்.எஸ். ஏன் மவுனமாக இருக்கிறது என்பதை அறிய தமிழக காங்கிரஸ் விரும்புகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதம் இருந்தது. தற்போதுள்ள பா.ஜ..க ஆட்சியில் 7 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கடன் வசூலில் இன்று வங்கிகள் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கின்றன. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாக குறைந்துள்ளது. அதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ந்திருக்கிறது.

கெஜ்ரிவால், சிவசேனா, மம்தா ஆகியோர் ஆளும் போது தான் தவறு நடைபெறுகிறதா? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தவறே நடக்கவில்லையா? விசாரணை அமைப்புகளை ஏவல் நாய்கள் போல் பா.ஜ.க. அவிழ்த்து விடுகிறது. ஜனநாயக முறையில் வெற்றி பெற்றவர்களை சர்வாதிகார முறையில் வீழ்த்த முயல்கிறார்கள். இதற்கெல்லாம் விரைவில் மக்கள் நல்ல பதில் சொல்வார்கள் எனக் கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil