திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொட்டகைகள், நடைபாதை கடைகள் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.
19ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களே தாமாக முன்வந்து அகற்றிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட நபா்கள் அகற்றவில்லை.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய், ஊரக வளா்ச்சி, நகராட்சி, நெடுஞ்சாலை, காவல் உள்ளிட்ட அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து 7 குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டார்.
இந்தக் குழுவினா் சனிக்கிழமை கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கினா். வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், காவலா்கள் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் 14 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த ஏழு குழுக்களும் இணைந்து அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தினை சுற்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் கிரிவலப் பாதையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா, சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர்களை நேரில் சந்தித்து கடையின் முகப்பில் மேற்கூரைகள் கூடுதலாக அமைக்க கூடாது, குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் கொட்ட வேண்டும், மேலும் மின்விளக்கு கம்பங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட வேண்டும் எனவும், ஒவ்வொரு மாதமும் கிரிவலப் பாதையில் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா என கண்காணிக்கப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி. கி.காா்த்திகேயன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அசோக்குமாா், வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையா் முருகேசன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ரகுராமன், டி.எஸ்.பி. குணசேகரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu