/* */

விவசாயிகள் நவீன யுக்திகளில் சாகுபடி செய்ய வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தல்

விவசாயிகள் நவீ்ன யுக்திகளில் சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

விவசாயிகள் நவீன யுக்திகளில் சாகுபடி செய்ய வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தல்
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. நெல் விளைச்சலில் தஞ்சைக்கு அடுத்து 2 ம் இடத்தில் உள்ளது. மணிலா விளைச்சலில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பால் உற்பத்தியில் 4 ம் இடத்தில் உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் விவசாயம் லாபகரமானதாக இல்லை என்பது பெரும்பாலான விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஹரக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்

இங்குள்ள விவசாயிகள் வேளாண் துறை கூறும் நவீன யுக்திகளை சரிவர பயன்படுத்து வதில்லை. பழைய முறைப்படியே விவசாயம்செய்வதால் அதிக மகசூல் கிடைப்பதில்லை என்றார் . மே லு ம் அவர் கூறியதாவது:

இம்மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 518 எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 3 போக நெல் சாகுபடி செய்தாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் விளையும் சம்பா நெல் சாகுபடி மட்டுமே 80 ஆயிரம் எக்டரில் பயிரிடப்படுகிறது.

புதிய ரகநெல் வகையான என்பிஆர்606, மகேந்திரா, ஆடு துறை37, ஆடுதுறை45, ஏடிடி35 மற்றும் ஏடிஎப் ரகங்கள் பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மணிலா இம்மாவட்டத்தில் 81 ஆயிரத்து 700 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதிலும் புதிய ரகமான விஆர்8, டிஎம்வி14, தரணி போன்ற மணிலா பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

35 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுறது. இதிலும் புதிய ரகமான கோ86032, கோ11015, கோவி 09356 என்ற ரகங்களை பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஊடுபயிராக விவசாயிகள் உளுந்து பயிரிடலாம். இதிலும் புதிய ரகமான விபிஎன்8, விபி என்10, விபிஎன்11 ஆகிய ரகங்களை பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இங்குள்ள விவசாயிகள் அருகாமையில் உள்ள வேளாண் அலுவலகத்திற்கு சென்று என்ன பயிரிடலாம்? எதை பயிரிடலாம்? என்ன உரம் இடலாம்? என்பதை கேட்டறியலாம். ஒட்டுமொத்தத்தில் திட்டமிட்டு நவீன யுக்திகளை கடைப்பிடித்து விவசாயம் செய்தால் லாபம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புண்டு என்றார்.

Updated On: 11 Jun 2024 1:45 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு