திருவண்ணாமலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாதையிடம் இரண்டு பெண்கள் கைவரிசை

மூதாதையிடம் நகை பறிப்பு ( மாதிரி படம்)
திருவண்ணாமலையில் வீட்டில் தனியாக இருந்தால் மூதாட்டியிடம் பட்டப் பகலில் இரண்டு பெண்கள் அரிசி காணிக்கை கேட்பது போல் வந்து செயின் மற்றும் பணம் பறித்து சென்றதால் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் ஒன்பதாவது தெருவில் அரசு அலுவலர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் 60 வயதான மூதாட்டி ராணி என்பவர் தனியாக வசித்து வருகிறார். ராணிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பெண் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் இருப்பதால், ராணி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். ஒரு மகன் மட்டும் தினமும் ராணியின் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு சொல்லுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பகலில் இரண்டு பெண்கள் ஆடி மாதம் பொங்கல் வைக்க அரிசி காணிக்கை கேட்பது போல் வந்துள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் ராணி தனியாக இருப்பதை அறிந்து தலையில் துணியை போட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்று அடித்து, மூன்று பவுன் தங்க நகை மற்றும் 7000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனராம். வயதான மூதாட்டி ராணி கூச்சல் இடுவதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினார்.
இதனையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.
மேலும் அந்தப் பெண்கள் பார்ப்பதற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்களைப் போல் இருப்பதாக சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை ஆன்மீக நகரம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், திருவண்ணாமலையில் போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்பது திருவண்ணாமலை பொதுமக்கள் மற்றும் வேங்கி கால் பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கையாக உள்ளது. பட்டப்பகலில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டு பெண்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu