ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு சக்தி என்ற திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்ஸ் டாப் சென்டர் என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் அமைந்துள்ளது. இதில் 24 மணி நேரம், அனைத்து நாட்களும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ உதவி சட்ட, உதவி காவல்துறை, உதவி உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும் . இச்சேவை மையத்தில் பணிபுரிய பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மூன்று வழக்குப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சமூகப்பணி ,ஆலோசனை, உளவியல், சமூகவியல், மனநலம் இந்த பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு பணியில் குறைந்தபட்சம் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும். அத்தகைய சூழலிலோ அல்லது இது தொடர்பான சூழல்களில் ஒரு வருடம் ஆலோசகர் பணியில் இருப்பது விரும்பத்தக்கதாகும்.
மேற்கு குறிப்பிடப்பட்ட கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கணினி பயிற்சி பெற்றவர்களுக்கும் உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தொகுப்பூதியம் மாதம் 15,000 மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2024, ஆகும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம் ,திருவண்ணாமலை. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu