பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி துவக்கம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பற்றிய கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கூறினார். தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பற்றிய கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேசுகையில்:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் தொகை விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது. இக்கணக்கெடுப்பில் கல்வி மற்றும் வேலை நிலைமைகள் பற்றியும், நிலவகைப் பயன்பாடு மற்றும் நிலக்குத்தகை பற்றிய விவரங்களையும், பழங்குடியினரின் நலவாழ்வு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விவரங்களையும், அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் பழங்குடியினர் நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகள் பற்றிய விவரங்களையும், பழங்குடியினருக்கான உள்கட்டமைப்பு குறித்த விவரங்களையும் , பழங்குடியினருக்கான வன உரிமைச் சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு மற்றும் அச்சட்டத்தின் விளைவுகளின் பயன்பாடு குறித்த விவரங்களையும் சேகரிக்கப்படுவது இக்கணக்கெடுப்பின் நோக்கமாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரையில் 1,062 பழங்குடியினர் குடியிருப்புகளில் 580 கணக்கு சேகரிப்பவர்களை கொண்டு இக்கணக்கெடுக்கும் பணி வருகின்ற 1.8.2024 முதல் நடைபெற உள்ளது. எனவே, வனத்துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இக்கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்,
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட வனத்துறை அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வளர்ச்சி பிரிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu