திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் டெபாசிட் இழந்த சுயேச்சைகள்

பைல் படம்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 31 பேர் களத்தில் இருந்தனர்.
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று காலை சரியாக 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, தற்போது ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இறுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 931 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
அண்ணாதுரை திமுக, 5 லட்சத்து 47 ஆயிரத்து 379 ,
கலியப்பெருமாள் அதிமுக, 3 லட்சத்து 13 ஆயிரத்து 448
அஸ்வத்தாமன் பாஜக, 1 லட்சத்து 56 ஆயிரத்து 650
ரமேஷ் பாபு நாம் தமிழர் 83 ஆயிரத்து 869
நோட்டாவுக்கு 11 ஆயிரத்து 957 வாக்குகள் விழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகையை பெற முடியும். அதன்படி திருவண்ணாமலை தொகுதியில், வாக்குகள் பதிவானது. எனவே, ஆறில் ஒரு பங்கு வாக்கு என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்றவர்கள் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப பெற முடியும். அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட 31 வேட்பாளர்களில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு, சுயேச்சைகள் உட்பட 29 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu