திருவண்ணாமலையில் புனரமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பு
புனரமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு.
திருவண்ணாமலை வேட்டவலம் திருக்கோவிலூர் சாலை சந்திப்பில் கடந்த 98 ஆம் ஆண்டு திருக்குறள் நெறி பரப்பு மையம் சார்பில் அதன் நிறுவனர் கேப்டன் சாமிநாதன் மூலம் திருவள்ளுவர் திருவுருவ சிலை நிறுவப்பட்டது. அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சரும் தற்போதைய தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி அதனை திறந்து வைத்தார்
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விரிவாக்க பணிக்காக திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் திருவள்ளுவர் சிலை புனரமைக்கப்பட்டு புதிய பீடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, புனரமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ.கிரி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா, திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிா்வாகிகள் தமிழ்ச்செல்வி, கமலக்கண்ணன், மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் இந்திரராஜன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், தமிழ் எழுத்தாளர்கள், திருக்குறள் தொண்டு மையத்தின் நிர்வாகிகள், திருவண்ணாமலை நகர அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu