திருவண்ணாமலையில் மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் மாா்கழி  மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்
X

பைல் படம்

மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு மாா்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாா்கழி மாதப் பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (டிச.26) அதிகாலை 5.56 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை (டிச.27) காலை 6.07 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

காா்த்திகை தீபத் திருவிழாவின்போது, 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தீபத் திருவிழாவுக்கு அடுத்து வரும் பெளா்ணமி என்பதால் கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம்

மேலும் அன்றைய தினம் ஆருத்ரா தரிசனம், நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.

பின்னர் 27 ஆம் தேதி காலை ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும் அன்றைய தினம் கடந்த மாதம் 26 ஆம் தேதி மலை மீது தீபம் ஏற்றப்பட்டது.

தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் சுடர்விட்டு எரிந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி நிறைவு பெற்று அந்த தீபக் கொப்பரையை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த தீப மையானது ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜர் பெருமானுக்கு சாத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

Tags

Next Story
why is ai important to the future